ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன், கூட்டமைப்பு ஐக்கியத்தை பேச்சளவில் மாத்திரமே கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன், கூட்டமைப்பு ஐக்கியத்தை பேச்சளவில் மாத்திரமே கொண்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ்

பாறுக் ஷிஹான்

பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறுவேன் எனவும் வயதுபோன பின்னர் அரசியல் செய்யப் போவதில்லை எனவும் கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மக்கள் சந்திப்பில் இக்கருத்தினை முன்வைத்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் ஐக்கியம் பற்றி பேச்சு மாத்திரம் இறுதி வரை இருக்கின்றது. செயல் வடிவம் கொடுப்பது பற்றி பேச வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும். மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் அவசியமில்லாமல் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாங்கள் கட்சி சார்ந்து இருந்தாலும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு எம்மால் முடியும். 
அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது போன்று எங்களுக்கு 5 ஆசனம் இருந்தால் போதும். அதனால்தான் மக்கள் ஆணையை பெறுவதற்காக வட கிழக்கில் தனித்து போட்டிடுகிறோம். அத்துடன் பழிவாங்கும் எண்ணம் இருக்குமானால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. நாங்கள் அன்று என்ன சொன்னோமோ அதுதான் இன்று நடந்திருக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கியத்தை பேச்சளவில் மாத்திரமே கொண்டுள்ளனர். நான் அரசுடன் பேசுவதற்கு பக்க பலமாக பிரதிநிதிகள் வேண்டும் அப்போதுதான் அரசுடன் பேரம் பேச வேண்டும். அதற்கான ஆணையை நீங்கள் தருவீர்களானால் நான் உங்களுடன் நின்று செயற்படுவேன். 

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரம் இருக்கவில்லை. நல்லாட்சியை கொண்டு வந்து அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து இருக்கிறார். சேர் பொன் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, இரா சம்பந்தன், பிரபாகரன் போன்றோர் மக்களுக்கு எதுவும் உருப்படியாக செய்யவில்லை. 
மாறாக இந்திய அரசையோ, இலங்கை அரசையோ நாம் குற்றம் சுமத்த போவதில்லை. மக்கள் ஆணை எனக்கு தந்தால் நான் அம்பாறை மாவட்டத்தில் கிழமைக்கு 3 நாளாவது இங்கு வந்து சேவையாற்றவும் தயாராக இருக்கிறேன்.

நாங்கள் கூட்டமைப்பு போன்று முண்டு கொடுப்பதில்லை மாறாக கை உயர்த்துவதற்கு காரணம் மக்களுக்கு சேவை செய்வதற்காகும். மேலும் நான் முழு நேர அரசியல்வாதி என்பதை கூற விரும்புகின்றேன். சுமந்திரன், பியசேன போன்றோரை என்னுடன் ஒப்பிட வேண்டாம். அவர்கள் போன்று இதுவரை நான் ஒருபோதும் ஓய்வு எடுப்பதும் இல்லை வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இதன்போது மக்கள் தங்களது குறைகளை கேட்டறிந்த பின்னர் பிரச்சினைகளைத் தீர்த்து தருவதாக உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment