கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதிக்கவும் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதிக்கவும் - உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து நாடுகளிடமுமே உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜெனீவாவில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) இது தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, நோய்த் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சீனாவில் இந்நோய்த் தொற்று மற்றும் இறப்பு வீதங்கள் குறைந்து வருகின்ற போதிலும், ஏனைய நாடுகளில் இந்நோய்த் தொற்று மற்றும் இறப்பு வீதங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கமைய கொரோனா வைரஸ் தற்போது உலகளாவிய ரீதியில் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment