கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு

இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு தம்பதீவ யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்ற 891 பயணிகளை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இரண்டு விசேட விமானங்கள் பயன்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad