டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனை கடற்படையால் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனை கடற்படையால் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இலங்கை கடற்படையினர் இன்று (21) பொரளையில் உள்ள டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையை கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் உத்தரவின் பேரில், பொரளை, டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனை வளாகத்தை கடற்படையின் இராசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவினால் இன்றையதினம் கிருமிநீக்கம் செய்யப்பட்டது.

தினசரி அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெறும் டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையின் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

சொய்சா மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கட்டடங்களும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவ, இலங்கை கடற்படை எச்சரிக்கையாக உள்ளதாக, கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment