கடலில் கைப்பற்றிய போதைப் பொருள், சந்தேகநபர்கள் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

கடலில் கைப்பற்றிய போதைப் பொருள், சந்தேகநபர்கள் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

தென் கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமையன்று (29) போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று (05) காலை திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது கடலிலோ அல்லது நிலப்பரப்பிலோ கைப்பற்றப்பட்ட மிக பெருந்தொகையான போதைப் பொருள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் குறித்த போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, இரண்டு கட்டங்களாக இப்போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையின்போது 397 பைக்கற்றுகளில் பொதி செய்யப்பட்டிருந்த 400 கிலோ கிராம் ஹெரோயினும் 100 பைக்கற்றுகளில் பொதி செய்யப்பட்டிருந்த 100 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் 600 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின்போது இப்போதைப் பொருளை கொண்டு வந்த மற்றும் கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த வருடம் 762 கிலோ கிராம் ஹெரோயின், 3,653 கேரள கஞ்சா, 03 கிலோ கிராம் போதைப் பொருள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment