சிறைக் கைதிகளை பார்வையிட தடை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

சிறைக் கைதிகளை பார்வையிட தடை

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது இன்று (17) முதல் இரண்டு வாரங்களுக்கு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad