ஊரடங்கு, தனிமைப்படுத்தல் தொடர்பில் அரச உயர் மட்டமே தீர்மானிக்கும் - மக்களின் வாழ்க்கையை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

ஊரடங்கு, தனிமைப்படுத்தல் தொடர்பில் அரச உயர் மட்டமே தீர்மானிக்கும் - மக்களின் வாழ்க்கையை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம்

ஊரடங்கு பிரதேசங்கள், தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் தொடர்பிலான அனைத்து முடிவுகளையும் அரச உயர்மட்டமே தீர்மானிக்கும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வு செய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment