கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது கடற்படை வீரர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (29) இரவு ஆரச்சிக்கட்டு, சின்னக்கருக்குபனே பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடமையிலிருந்த கடற்படை அதிகாரிகள் குழுவினர், ஊரடங்கை மீறி செயற்பட்ட ஒருவரிடம் நாட்டின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த முற்பட்ட வேளையில், குறித்த நபர் அமைதியற்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கடற்படையினர் ஆரச்சிக்கட்டு பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்ததை அடுத்து, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை இன்றையதினம் (30) ஆரச்சிக்கட்டு பொலிஸார், சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment