இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அவணங்கள் சாட்சியங்களை மனித உரிமை ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் அடிப்படையில் இலங்கையின் மீது போர்க் குற்ற விசாணை நடைபெறவே வலியுத்தி வருகிறோம் என இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார்.
உழைக்கும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தினம் நேற்றுமுன்தினம் யாழ் பொது நுலகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மனிதகுலம் வாழ்கிறது என்றால் அது பெண்கள்தான் காரணம் அத்தகைய நாளில் நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்சியானது. இந்த நாட்டிலும் சரி உலக நாடுகளிலும் பெண்கள் சமத்துவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்பங்கள் இல்லாத நிலை பல நாடுகளிலும் உள்ளது. அதனை நாங்கள் அவதானித்துள்ளோம்.
பல நாடுகளில் பெண்கள் போராடியுள்ளார்கள் எமது நாட்டில் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராடினார்கள் இனத்தின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராடினார்கள் அந்த போராட்டத்தில் பலர் எம்மை விட்டு பிரிந்து விட்டார்கள் பலர் இன்னும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் இவர்களின் விடுதலைக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
ஜ.நா மனித உரிமையாளராக இருந்த நவனிதம் பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்த போது இறுதியுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆவணங்கள் சாட்சியங்களை நாங்கள் வழங்கியுள்ளோம் குறிப்பாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் வன்செயல்கள் தொடர்பில் ஒரு சில சாட்சியங்கள் நேரில் வழங்கியும் உள்ளோம்.
இதனை செய்வதற்கு ஆட்சியாளர்கள் மனித உரிமை ஆணையாளரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சிலருடைய உதவியினால் சுமார் 1.30 மணித்தியாலங்கள் சந்தித்து ஆவணங்களை ஒப்படைத்தோம். இந்த விடயங்கள் பலருக்கு தெரியாது பலரும் பலதைக் கூறுகிறார்கள் காலம் பதில் கூறும்.
பெண்களுக்கு சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று மேடைகளில் கூறிக் கொண்டிருக்காது அதற்கான செயல்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் சர்வதேச பெண்கள் தினத்தில் அவர்கள் தேவைகள் கிடைக்க வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேணடும் என்றார்.
இந்த நிகழ்வில் உழைக்கும் மகளிர் அமைப்பினர், கொழும்பு இந்து மகளிர் மன்றம், இலங்கை தமிழ் மாதர் சங்கத்தினர், யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment