மனோ கணேசன் ஆலோசனை படி தினக் கூலித் தொழிலாளருக்காய் ஜனகன் களத்தில்...! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

மனோ கணேசன் ஆலோசனை படி தினக் கூலித் தொழிலாளருக்காய் ஜனகன் களத்தில்...!

றிஸ்கான் முகம்மட்

கொரோனா வைரஸ் (Covid - 19) தொற்றுக் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு ஜனனம் Foundation, மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் ஆலோசனைப்படி ஜனனம் அறக்கட்டளை (Jananam Foundation) நிர்வாக அறங்காவலரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான ஜனகன் விநாயகமூர்த்தியால் இம்மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதற்கமைய நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மட்டக்குளி, கம்பெனி தெரு, ஒருகொடவத்தை, சொய்சாபுர, வெள்ளவத்தை, கிருலப்பனை, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வாழும் சுமார் 1700 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. 
இந்தகைய மனிதாபிமான நடவடிக்கைக்கு கொழும்பிலுள்ள பிரபல தொழிலதிபர் மாணிக்கவாசகம் அவர்களும் அருண் பிரசாந்த் அறக்கட்டளையும் நிதிப்பங்களிப்பு ஒத்தாசை வழங்கியதோடு, இன்னும் சில தன்னார்வத் தொண்டர்களும், தலைவர் மனோ கணேசனின் பணிப்பின் பேரில் இணைந்துகொண்டார். 

அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தாமதமாகின்றமையால், பலர் ஜனனம் அறக்கட்டளையைத் தொடர்புகொண்டவாறு உள்ளனர். ஆகையால், இவ்வாறு அல்லல்படுகின்ற மக்களுக்கு உலர் உணவு வழங்கும் செயற்பாட்டை தொடர்சியாக முன்னெடுக்கவுள்ளதாக ஜனனம் அறக்கட்டளையின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான ஜனகன், மேலும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment