நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசியம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசியம்

நாளை (16) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட ஏனைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக கருதி எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் COVID-19 தொற்று நோய் காரணமாக, நாளைய தினம் (16) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார சேவைகளை அத்தியாவசியமான சேவையாக கருதி மேற்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான சேவைகளும் இடையூறின்றி இடம்பெறும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

தமது அமைச்சில் ஊடகங்கள் மத்தியில் இன்று (15) காலை கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad