நாளை, நாளை மறுதினம் கொழும்பு பங்குச் சந்தை மூடப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

நாளை, நாளை மறுதினம் கொழும்பு பங்குச் சந்தை மூடப்படும்

நாளை (23) முதல் நாளை மறுதினம் (24) வரை தினசரி பரிவர்த்தனைகளுக்காக கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 வரை நீட்டிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரி ரேணுக விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் மாதம் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment