நெருக்கடியை எதிர்கொள்ள அரசியல் வேற்றுமைகள் கடந்து உதவத்தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய சூழ்நிலையில் அரசியலை நான் முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிடுகிறேன். இப்போது அரசாங்கத்திற்கு எமது உதவி தேவைப்படும் எனில், எம்மிடமிருந்து உதவியைக் கோருவதற்கு அரசாங்கம் விரும்பும் பட்சத்தில் அதனைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
எமது தேர்தல் பிரசாரம் தப்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நெருக்கடியில் அரசியலைக் கலக்கமுடியாது.
இந்த நெருக்கடியின் காரணமாக விரைவானதொரு சரிவைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment