யாழ். கொரோனா நோயாளி IDH மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் - மத போதகருடன் அரை மணி நேரம் கலந்துரையாடியவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

யாழ். கொரோனா நோயாளி IDH மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் - மத போதகருடன் அரை மணி நேரம் கலந்துரையாடியவர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறித்த நபர் சுவிஸில் இருந்து வந்த மத போதகருடன் கட்டட நிர்மாணம் தொடர்பாக அரை மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி ஆகியவற்றினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment