குதிகால் செருப்பு அணிய பெண்களை கட்டாயப்படுத்தலாமா? : ஜப்பான் பிரதமர் பதில் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

குதிகால் செருப்பு அணிய பெண்களை கட்டாயப்படுத்தலாமா? : ஜப்பான் பிரதமர் பதில்

வேலைக்குச் செல்லுகின்ற பெண்கள் குதிகால் செருப்பு அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாமா? என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பதில் அளித்துள்ளார்.

ஜப்பானில் வேலைக்குச் செல்லுகின்ற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை (ஹீல்ஸ்) அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இதற்கு எதிராக விமர்சித்து, அங்குள்ள நடிகையும், எழுத்தாளருமான யுமி இ‌ஷிகவா, ‘கு டூ’ என்ற ‘ஹே‌‌ஷ்டேக்’கை உருவாக்கி அது பிரபலமானது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமரான ‌ஷின்ஜோ அபேயிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

குறிப்பாக, வேலைக்குச் செல்லுகின்ற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை அணிய வேண்டும் என்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தள இயக்கம் உருவாகி உள்ளதே, இதில் உங்கள் கருத்து என்ன?’’ என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், ‘‘நடைமுறைக்கு ஒவ்வாத ஆடை, அணிகலன்களை பெண்கள் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது’’ என பதில் அளித்தார்.

அதே நேரத்தில், ‘‘தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய விதிகள் மீது அரசு முடிவு எடுப்பது என்பது கடினமான காரியம். இது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன்தான் கூடுதல் விவாதம் நடத்த வேண்டும்’’ என்றும் ‌ஷின்ஜோ அபே கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad