பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து - பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து - பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

(ஆர்.ராம்) 

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். அதனடிப்படையிலேயே இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேராயர் குறிப்பிட்டுள்ளர். 

எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆராதனைகளின் போது அனைத்து கத்தோலிக்கர்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடமைகளை நிறைவேற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment