பொதுத் தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம் - வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம் - வாசுதேவ

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம். சமர்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்குள் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கல் செல்லுப்படியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகவே பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சட்ட ஆலோசனைக்கு உட்படுத்தப்படும்.

ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மக்களை ஒன்றுபடுத்திய பொதுக்கூட்டம் இடம்பெறாது என்றார்.

No comments:

Post a Comment