வவுனியா செட்டிகுளம், முதிலியார்குளம் பகுதியில் இன்றையதினம் ஆராதனை நடாத்திய 15 க்கும் மேற்பட்டவர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரைத் தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூட வேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றையதினம் கிறிஸ்தவ மத ஆராதனை ஒன்று நடைபெற்றது.
இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 க்கு மேற்பட்டோரை கைது செய்ததுடன் பின்பு எச்சரித்து விடுவித்தனர்.
No comments:
Post a Comment