(எம்.மனோசித்ரா)
துறைமுக வளாகத்திற்குள் கடமைகளுக்காக பிரவேசிப்பதில் எந்த வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதற்கு அப்பால் வரும் நபர்கள் வாகனங்களுக்காக துறைமுக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
எவரேனும் துறைமுக வளவிற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் கைகளைக் கழுவிய பின்னர் முகக் கவசம் அணிய வேண்டியது அத்தியாவசியமாகும். அதற்கான வசதிகள் துறைமுக வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
துறைமுக வளாகத்தில் கடமை மற்றும் போக்குவரத்து பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் 6 மணித்தியாலங்களுக்குப் பிறகு கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அத்தோடு துறைமுகத்திற்கு சேவைக்காக வரும் ஊழியர்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment