(ஆர்.ராம்)
கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கின்றது.
இந்நிலையில் நாட்டின் சுற்றுலாத் துறையில் முன்னணியில் உள்ள முக்கிய நட்சத்திர விடுதிகள் மூன்று தனிமைப்படுத்தலுக்கான இட வசதியை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளன.
சினமன் (Cinnamon), சிட்ரஸ் (Citrus), செரண்டிப் (Serendib) ஆகிய நட்சத்திர விடுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கான இட வசதியை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
சிட்ரஸ் (Citrus) பொழுதுபோக்கு நிறுவனமானது, ஈவாஸ்கடுவவில் உள்ள சிட்ரஸ் (Citrus) நட்சத்திர விடுதியில் 150 அறைகளையும், செரண்டிப் (Serendib) பொழுதுபோக்கு நிறுவனமானது தனக்குச் சொந்தமான நீர்கொழும்பு கிளப் டொல்பின் நட்சத்திர விடுதியில் உள்ள 154 அறைகளையும், ஜோன் கீல்ஸ் நிறுவனமானது சினமன் நட்சத்திர தொடரில் உள்ள திருகோணமலையில் உள்ள ரின்கோ புளு நட்சத்திர விடுதியில் 81 அறைகளையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷன் பலேந்திரா தமது நிறுவனத்தின் தீர்மானத்தினை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதோடு ஏனைய இரு நட்சத்திர விடுதியின் முகாமைத்துவமும் தமது அறிவிப்புக்களை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment