பிம்ஸ்டெக் மாநாடு இம்முறை இலங்கையில் - ஜனாதிபதி, பொதுச் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

பிம்ஸ்டெக் மாநாடு இம்முறை இலங்கையில் - ஜனாதிபதி, பொதுச் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவிருப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

பொதுச் செயலாளர் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டார். 

2018 - 2020 ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது. இம்மாநாடு செப்டெம்பர் மாதம் நடைபெறும்.

பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் மார்ச் மாதம் 01 - 03 வரை இலங்கையில் நடைபெற்றதுடன், அங்கு பிம்ஸ்டெக் பிரகடனம் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பிம்ஸ்டெக் மாநாடு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் 07 ஐ கொண்ட பன்னாட்டு அமைப்பாகும். 

இதன் பிரதான நோக்கம், வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழிநுட்ப, பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாகும்.

பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு, தற்போது அது 07 துறைகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை, விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத்துறைக்கு தலைமை வகிக்கின்றது. பங்களாதேஷ் வியாபார மற்றும் முதலீடு, பூட்டான் சுற்றாடல், காலநிலை சீர்கேடுகள், மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, இந்தியா பாதுகாப்பு, நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கு தலைமை ஏற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad