பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை எரிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை எரிக்கவும்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக மேல் மாகாண கழிவுப் பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் போன்ற பொருட்களை முடிந்தவரை எரித்துவிடுமாறு மேல் மாகாண கழிவுப் பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கழிவுப் பொருட்களை அகற்றுவதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன இது தொடர்பிலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும மேலும் கூறினார்.

No comments:

Post a Comment