கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 421 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 421 பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 293 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இவர்களில் 11 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 ஆயிரத்து 952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு.

சீனா - 3,255
இத்தாலி - 4,032
ஸ்பெயின் - 1,093
ஜெர்மனி - 68
அமெரிக்கா - 279
ஈரான் - 1,433
பிரான்ஸ் - 450
தென்கொரியா - 102
சுவிஸ்சர்லாந்து - 56
இங்கிலாந்து - 177
நெதர்லாந்து - 106
பெல்ஜியம் - 37
ஜப்ப்பான் - 35
பிரேசில் - 11
கிரீஸ் - 10
இந்தோனேசியா - 32
பிலிப்பைன்ஸ் - 18
ஈராக் -17
சான் மரினோ - 14
அல்ஜிரியா - 11

No comments:

Post a Comment