கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தகவல் திரட்டும் ஹட்டன் டிக்கோயா நகர சபை - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தகவல் திரட்டும் ஹட்டன் டிக்கோயா நகர சபை

ஹட்டன் நகரிலுள்ள உல்லாச விடுதிகளுக்கு வருகை தருவோரின் விபரக் கோவையை நாளாந்தம் நகர சபைக்கு வழங்க வேண்டுமென ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் ஆர்.பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ,

நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று நோய் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்படி தகவல் திரட்டும் வேலைத்திட்டத்தை ஹட்டன் டிக்கோயா நகரசபையும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உல்லாச விடுதிகளுக்கு வருகைத் தருவோரின் விபரத்தை பதிவு செய்ய விண்ணப்ப படிவமொன்று நகர சபையினால் தயார் செய்யப்பட்டு உல்லாச விடுதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் விடுதிகளுக்கும், ஹோட்டல்களுக்கும் வருகைத்தரும் உல்லாச பயணிகளின் பெயர் விபரங்களை ஒவ்வொறு நாளும் நகரசபைக்கு வழங்க வேண்டும் எனவும் நகரசபை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad