வைரசினால் எங்களை தோற்கடிக்க முடியாது - மூடப்பட்ட இத்தாலியின் வீதிகளில் பாடல் - இசை மூலம் உளவியல் நெருக்கடியை குறைக்க முயலும் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

வைரசினால் எங்களை தோற்கடிக்க முடியாது - மூடப்பட்ட இத்தாலியின் வீதிகளில் பாடல் - இசை மூலம் உளவியல் நெருக்கடியை குறைக்க முயலும் மக்கள்

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேசிய கீதத்தையும் ஏனைய பாடல்களையும் பாடி தங்கள் மனோநிலையை உறுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 

வெள்ளிக்கிழமை தங்கள் பல்கனிகளில் நின்றவாறு இத்தாலிய மக்கள் பாடல்களை பாடியுள்ளனர். வீடுகளிற்குள் முடங்கியுள்ள மக்கள் தங்கள் மனோநிலைக்கு மறுபடி உயிரூட்டுவதற்காக தங்கள் வீடுகளில் உள்ள இசைக்கருவிகளை எடுத்து மாடிகளில் நின்று இசைத்துள்ளனர். கிட்டார் போன்ற இசைக் கருவிகளை எடுத்துக்கொண்டு மக்கள் தங்கள் பல்கனிகளில் நின்று பாடல்களை பாடியுள்ளனர். 

இத்தாலியில் தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நேப்பிளெசில் வியாழக்கிழமை நாங்கள் ஒருபோதும் முயற்சியை கைவிடமாட்டோம் என்ற பாடல் இசைக்கப்பட்டவேளை பலர் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அதனை பாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தாவாறு பாடல்களை பாடியுள்ளனர். 

எங்களை போன்ற மக்கள் தங்கள் முயற்சிகளை கைவிடமாட்டார்கள், நாங்கள் அனைவரும் ஐக்கியப்பட்டுள்ளோம், உங்கள் பல்கனிக்கு வாருங்கள் நாங்கள் எதிர்நோக்கியுள்ள வைரசினால் எங்களை தோற்கடிக்க முடியாது என்ற பாடல் வரிகளை இத்தாலி மக்கள் பாடியுள்ளனர். 

இத்தாலியின் பல நகரங்களில் இதுபோன்று மக்கள் பல்கனியிலிருந்தவாறு பாடல்களை பாடியுள்ளனர். பல இசைக்கலைஞர்கள் இதில் தங்களை இசைத்துக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment