பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவத் தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை வைத்தியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவத் தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் கடந்த 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். தற்போது, அவருக்கு கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.
அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை வைத்தியர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோல், அவரை சந்தித்த அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரன்சானா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment