மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் “கொரோனா” சிகிச்சை முகாமை அங்கிருந்து அகற்றக்கோரியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று செவ்வாய்க்கிழமை கடையடைப்புச் செய்து விசேட நோன்பிருந்து இறை வணக்கங்களில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு அறிவித்தலை காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி வர்த்தகர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அறிவித்தலை அடுத்து காத்தான்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment