சைப்பிரஸின் மிகப்பெரிய வைத்தியசாலை தனது பணிகளை நிறுத்தி வைத்தது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

சைப்பிரஸின் மிகப்பெரிய வைத்தியசாலை தனது பணிகளை நிறுத்தி வைத்தது!

சைப்பிரஸில் உள்ள மிகப்பெரிய வைத்தியாலையொன்று தனது பெரும்பாலான வைத்திய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. 

குறித்த வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கு தலைமை தாங்கும் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

64 வயதுடைய மேற்படி வைத்தியர் அண்மையில் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அங்கிருந்து வந்த அவர் வைத்தியசாலையின் ஏனைய நோயாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாகவும் கூறப்படுகின்றது. 

செவ்வாய்க்கிழமை முதல், நிக்கோசியா பொது வைத்தியசாலையில் அனைத்து சேர்க்கை, வெளி நோயாளர் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் வருகைகள் 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. 

அத்துடன் அறுவை சிகிச்சை பிரிவின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நோயாளிகள் அவர்களின் பொது சுகாதார நிலையைப் பொறுத்து படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் குறித்த வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:

Post a Comment