ட்ரம்பின் அறிவிப்பையடுத்து கடுமையாக சரிந்த ஐரோப்பிய பங்குச் சந்தை! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

ட்ரம்பின் அறிவிப்பையடுத்து கடுமையாக சரிந்த ஐரோப்பிய பங்குச் சந்தை!

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். 

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோருக்கே இவ்வாறு அமெரிக்கா தடை விதித்தது.

No comments:

Post a Comment