(ஆர்.விதுஷா)
பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, நாட்டு மக்கள் கட்சி, நிறம், சின்னம் என்று பாராது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன், இணைந்து செயற்படினும் அவர்களுக்கு இடையிலும் பல முரண்பாடுகள் இருக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தரப்பினருக்கு பௌத்த மதகுருமார், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் ஆதரவு காணப்பட்டது. தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக மாறத் தயாராகவுள்ளனர்.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு புறம்பாக மாறுபட்ட கோணத்திலேயே இந்த அரசாங்கம் பயணிப்பதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment