இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடித்து கொரோனா சவாலை வெற்றி கொள்வோம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடித்து கொரோனா சவாலை வெற்றி கொள்வோம்

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், அறிவு மற்றும் ஐக்கியம் என்பவற்றுடன் முன்னோக்கி பயணித்து, வைத்திய ஆலோசனைகளைக் கடைப்படித்து சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நோய் தொற்றுக்குள்ளான நோயாளிகளை வெறுத்தல், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் மனித நேயத்துக்கு பொருத்தமானது அல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டுக்கும் இது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி இது தொடர்பில் கூடுதலான கவனத்துடன் செயற்பட்டு வருகின்றார். சுகாதார பிரிவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், வைத்திய ஆலோசனைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

தேவையான மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உண்டு, இதேபோன்று நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களும் கையிருப்பில் உண்டு இதனால் பொதுமக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment