முகக் கவசம், கைகழுவும் திரவம், கையுறைகள் அத்தியாவசியப் பொருட்களாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

முகக் கவசம், கைகழுவும் திரவம், கையுறைகள் அத்தியாவசியப் பொருட்களாக அறிவிப்பு

இந்திய அரசாங்கம் முகக் கவசம், கைகழுவும் திரவம் (சானிடைசர்), கையுறைகள் ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் முகக் கவசம், கைகழுவும் திரவம் (சானிடைசர்), கையுறைகள் ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்துள்ளது. அதோடு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமுல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் இந்திய மாநில அரசாங்கங்கள் இவைகளின் உற்பத்தி, விநியோகம், விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இவைகளை பதுக்கவோ கள்ளச்சந்தையில் விற்கவோ முடியாது எனவும் இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment