க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 12 முதல் மார்ச் 2 இல் நிறைவடைந்திருந்த நிலையில், மீளவும் கடந்த 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை பெறுபேறுகளை பெறும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மீள அறிவிக்கப்படும் வரை இடைநிறுத்தப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad