கைதான ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

கைதான ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கும் விளக்கமறியல்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 05 மாணவர்களுக்கும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தியபோதே, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் மாணவர் ஒருவர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை (06) பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின்போது, உயரமான இடத்திலிருந்து வீழ்ந்த டயர் ஒன்று, பசிந்து எனும் மாணவரின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவன், மிக மோசமான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த டயர் உயரமான இடத்திலிருந்து தள்ளி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment