மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் கண்ணீருடன் கவனயீர்ப்புப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் கண்ணீருடன் கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக கொண்டு வந்ததைக் கண்டித்து ஜெயந்தியாய பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது, எம்மை நோயாளி ஆக்காதே, கொரோனவை தூரப்போக்கு, எம்மை நோயாளியாக்காதே, அரசே நாம் உம் பக்கம் நீ யார் பக்கம், எம்மை சாகடிக்காதே வாழ விடு, பரிசோதனை என்ற பேரில் எம்மை மடையனாக்காதே, எம்மை நிம்மதியாக வாழ விடு என்பன பல வாசகங்கள் ஏந்தியாவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெயந்தியாய பிரதேசத்தில் அயல் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை இடம்பெறுவதால், இங்கு வாழும் எமது பிள்ளைகள் முதல் அனைவரும் பாரிய ஆபத்திற்குள்ளாக நேரிடும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே, உடனடியாக அகற்றுமாறு கோரி பொதுமக்கள் அழுது கொண்டு தங்களது கோசங்களை எழுப்பினர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், செவ்வாய்கிழமை இத்தாலி மற்றும் தென் கொரியா நாடுகளிலிருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்ழகத்தில் வைத்து சிகிச்சை வழங்கி வரும் நிலையில், அயல் கிராமமாக ஜெயந்தியாய பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்ழகத்தினை கொரோனா சிகிச்சை மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment