மானிய உரத்திற்காக முண்டியடித்த விவசாயிகள் - இடைவெளி விட்டு நிற்குமாறு பொலிசார் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

மானிய உரத்திற்காக முண்டியடித்த விவசாயிகள் - இடைவெளி விட்டு நிற்குமாறு பொலிசார் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்கும் நடவடிக்கை கமநல சேவை திணைக்களம் ஊடாக நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்தி 366 ஏக்கர் விவசாய செய்கைக்காவும் 3 ஆயிரத்தி 12 ஏக்கர் மேட்டு நில செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (30) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் உடையார் கட்டு கமநல சேவை நிலையத்தின் முன் விவசாயிகள் கூட்டமாக நிற்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
காலை 8.45 மணி ஆகியும் கமநல சேவை திணைக்களம் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நிலையத்தை சூழ்ந்து கொண்டார்க்ள்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மக்கள் நெரிசலை குறைத்து இடைவெளி விட்டு நிற்குமாறு பணித்தனர்.

அதனைத் தொடர்ந்து 9.00 மணியளவில் கமநல சேவை திணைக்களம் திறக்கப்பட்டு விவசாயிகளுக்கான உரம் வழங்கப்பட்டன.

கட்டம் கட்டமாக தலா 5 விவசாயிகள் உள்ளே அழைக்கப்பட்டு மானிய உரம் வழங்கப்பட்டு வருகின்றது.

(புதுக்குடியிருப்பு நிருபர் - முல்லை கீதன்)

No comments:

Post a Comment