கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒரு வாரம் ஆகிறது. நான் அதை மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி ட்ரம்ப் ஆலோசித்தார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், “கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒரு வாரம் ஆகிறது. நான் அதைமிகவும் ‘மிஸ்’ செய்கிறேன்” என்று கிண்டலாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment