சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) தேசிய தொழில்துறை மன்றம் அறிமுகம் செய்யப்பட்டது.
தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், அவர்களை மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த, தேசிய தொழில்துறை மன்றம் நிறுவப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க மத்தியஸ்தராக செயற்பட்டு அவர்களை ஊக்குவிக்க தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை செயற்படவுள்ளது. இதற்கான பின்னணியை வகுப்பதற்கு இந்த மன்றம் அமைக்கப்பட்டது.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற இந்நிகழ்வில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விடையளிக்க, அமைச்சின் அதிகாரிகள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எதிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தி, இதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்படவுமுள்ளது.
இதன்போது தேசிய தொழில்துறை மன்றம் (NEF) என்ற பெயரில் இணையத்தளமும் ஆரம்பிக்கப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் அனுஷ்க குணசிங்க, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment