மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா நோயாளர்களைக் கொண்டு வருவதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா நோயாளர்களைக் கொண்டு வருவதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கொரோனா நோயாளர்களைக் கொண்டு வருவதைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று 10.03.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்லாமல் வித்தியாலய நுழைவாயிலை மூடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம், கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே, இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே, எமது மாகாணத்தை அழிக்க எடுக்கும் சதியை நிறுத்து மக்களைக் காப்பாற்று என்பன போன்ற பல வாசகங்கள் ஏந்தியாவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்தோடு, ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாகத் தடைப்பட்டதுடன், ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் மற்றும் ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்தனர்.
தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவுள்ள நிலையில், பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment