கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட ஒருவர் மீண்டும் எப்போது சமூக தொடர்புகளை ஏற்படுத்தலாம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட ஒருவர் மீண்டும் எப்போது சமூக தொடர்புகளை ஏற்படுத்தலாம்

கொரோனா வைரசிலிருந்து ஒருவர் குணமடைந்து பின்னர் அவர் சமூகத்திற்குள் மீண்டும் செல்லலாம் என்பதை உறுதி செய்வதற்கு அவர் குணமடைந்த பின்னர் இரண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் அதில் அவருக்கு நோய் இல்லை என உறுதி செய்தாலே அவர் முற்றாக குணமடைந்துவிட்டார் என உறுதிப்படுத்த முடியும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நீங்கள் சமூகத்தில் செல்வதற்கு முன்னர் இரண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் அதில் உங்களுக்கு நோய் இல்லை என்பது உறுதியாக வேண்டும் என அமெரிக்காவின் ஓவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்டனி பவுசி தெரிவித்துள்ளார். 

உங்களுக்கு நோய் இருப்பது உறுதியானால் எப்போது ஏனையவர்களுடன் தொடர்புகொள்ளலாம் என முகநூல் நிறுவனத்தின் தலைவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

உங்களுக்கு நோய் தொற்றிருப்பது உறுதியானால் உங்களுக்கு வைரஸ் உள்ளது என அர்த்தம் என அன்டனி பவுசி தெரிவித்துள்ளார். 

நீங்கள் மீண்டும் சமூகத்திற்கு திரும்புவதற்கான கட்டாய வழிமுறையாக அடுத்தடுத்த இரண்டு நாட்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது காணப்படுகின்றது. நீங்கள் வைரசினை பரப்புகின்றீர்கள் இல்லை என்பதையும் நீங்கள் வீடு செல்லலாம் என்பதையும் உறுதி செய்யவே இந்த பரிசோதனை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் காலப்போக்கில் இதுவும் மாறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment