கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு - News View

About Us

About Us

Breaking

Friday, March 20, 2020

கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலமை காரணமாக, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரையில் இலங்கையில் 70 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மாவட்ட அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம் வருமாறு, 

கம்பஹா மாவட்டம் 18 பேர் 
கொழும்பு மாவட்டம் 17 பேர் 
புத்தளம் மாவட்டம் 12 பேர் 
குருநாகல் மாவட்டம் 04 பேர் 
களுத்துறை மாவட்டம் 04 பேர் 
இரத்தினபுரி மாவட்டம் 03 பேர் 
காலி மாவட்டம் 01 
மாத்தறை மாவட்டம் 01 
மட்டகளப்பு மாவட்டம் 01 
பதுளை மாவட்டம் 01 

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள 14 வைத்தியசாலைகளில் 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முடிந்தவரை பாெதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment