கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல்.பரீட் பிரார்த்தனையினை நடாத்தினார்.

இரவு நேர தொழுகை இறை வழிபாட்டினையடுத்து பிரசங்கம் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உரிய பரிகாரம், மருத்துவம் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் இன்று உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் உயிர் அச்சத்துடன் இருக்கின்றனர்.
இதனால் இறை பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளும்படி ஏற்பாட்டு அமைப்பின் பிரதிநிதி ஏ.எல்.எம்.சிப்லி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கொரொனா வைரஸ் உலகில் இதுவரை 121 நாடுகளில் பரவியுள்ளதாகவும் இலட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஐயாயிரம் பேர் வரை மரணித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எமது நாட்டில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 18 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad