விவசாய நடவடிக்கை, விலங்கு வேளாண்மைகளில் பாதுகாப்பான முறையில் ஈடுபட முடியும் - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

விவசாய நடவடிக்கை, விலங்கு வேளாண்மைகளில் பாதுகாப்பான முறையில் ஈடுபட முடியும் - அரசாங்கம்

(இராஜதுரை ஹஷான்) 

நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விவசாயிகள் அத்தியாவசிய விவசாய நடவடிக்கைகள் மற்றும் விலங்குகள் வேளாண்மை நடவடிக்கைகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஈடுப்பட முடியும் என மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை விவசாய மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்கலாம். 

உற்பத்திகளை சந்தைப்படுத்த தேசிய விவசாயத்துறை தகவல் மத்திய நிலையம் 071-4157585 என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான கிருமி நாசிகள் மற்றும் இதர பொருட்களை அருகில் உள்ள விவசாய தகவல் மற்றும் சேவை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment