மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் இயங்கிவரும் முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் வைத்திய பணியாளர்களின் தியாகங்களையும், அவர்கள் இம்மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொள்ளும் சிரத்தையினையும் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கமைய இப்பணியாளர்களின் நலனுக்காக சிற்றுண்டி உணவு செலவுக்கென ரூபா 25 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது.
இந்த அன்பளிப்பு நிதியினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கத்திடம் முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினர் இன்று மதியம் கையளித்தனர்.
இந்த அன்பளிப்பினைக் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பின் தலைவர், கே.எம்.எம்.கலீல், அங்கத்தவர். வர்த்தகர் எம்சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகிகளான வர்த்தகர் எம்.எஸ்.எஸ்.பாயிஸ், கணக்காளர் கே.எம். சுகைர் பேஸ் இமாம் அல்ஹாபில் மௌலவி நியாஸ் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி யிருந்தனர்.
No comments:
Post a Comment