எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 14 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களில் எவ்விதமான நோய்த் தொற்றில்லாதவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதன் தொடரில் இன்று 30.03.2020ம் திகதி திங்கட்கிழமையும் ஒரு தொகுதியினர் கண்காணிப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் இராணுவத்தினரின் பஸ் மூலமாக புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து பஸ் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் 58 பேர் கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பெரியோர்களும் உள்ளடங்குகின்றனர்.
No comments:
Post a Comment