எஸ்.எம்.எம்.முர்ஷித்
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250 பொதிகள் மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு முன்வந்துள்ளது.
சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப் பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (30) பொறுப் பேற்றுக்கொண்டார்.
இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிவாரணப் பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர குறித்த முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு கோட்டமுனை பகுதி மக்களுக்கு விநியோகிக்க 30 உணவுப் பொருட்களடங்கிய பொதிகள் கோட்டை முனை யூஸுபிய்யா முஸ்லீம் பள்ளிவாசல் நிருவாக்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.
No comments:
Post a Comment