மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்தொன்றினை வைரசிற்கு எதிராக பயன்படுத்த முடியுமா என ஆராயுமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் உணவு மருந்து நிர்வாகத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்தினை உடனடியாக மக்களிற்கு வழங்க முடியும் அதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குளோரோகுயின் என்ற மருந்தினையே டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட மருந்தினை மக்களிடம் பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரசின் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா உருவாக்க முயலும் மருந்துகளில் இதுவுமொன்று என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தினை முன்னர் மலேரியாவினை தடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளோம் இதனால் அந்த மருந்து ஆட்களை கொல்லப் போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவர் என்ற மருந்திற்கும் அனுமதி வழங்கப் போவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment