இத்தாலியில் கொரோனாவினால் இறப்போர் விகிதம் அதிகமாகின்றமைக்கான காரணம் வெளியானது..! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

இத்தாலியில் கொரோனாவினால் இறப்போர் விகிதம் அதிகமாகின்றமைக்கான காரணம் வெளியானது..!

சீனாவில் தொடங்கி 118 நாடுகள் வரை தொற்றுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவுக்கு வெளியே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதியப்பட்ட நாடாகவும் இத்தாலி காணப்படுகின்றது. 

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 80,000 ஐ எட்டிய போதும் இறப்பின் சதவீதம் 3.91 ஆக காணப்பட்டது. 

எனினும் இத்தாலியில் இதுவரை 10,149 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 631 பேர் வரை மரணமடைந்துள்ளனர். அதன் அடிப்படையில் இத்தாலியின் இறப்பு சதவீதம் 6.22 ஆக காணப்படுகின்றது. 

இந்நிலைமைக்கு இத்தாலியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் இத்தாலி உலகிலேயே அதிக வயதான மக்களை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் நோய் தாக்கம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் செரிவு அதிகமாக காணப்படுகின்றமை மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் இறந்தவர்களில் 14 சதவீதமானோர் 80-85 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 12 சதவீதமானோர் 70-79 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் மேல் உள்ள சீன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய கொரோனா வைரஸ் வயோதிபர்களிடையே அதிக தாக்கம் செலுத்துகின்றது. அதாவது அவர்களின் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளமையால் வயதானவர்கள் கொரோனா வைரஸூக்கு எதிராக போராட முடியாமல் இறப்பு நேர்கின்றது. 

கொரோனா வைரஸ், வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களிடையே குறுக்கு தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், நோய் தொற்றை ஆரம்ப கட்டத்தில் சமாளிப்பது கடினமான காரியமாக உள்ள நிலையில் வைத்திய துறையில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் வைரஸ் தாக்கம் இணங்காணப்பட்ட நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment