தேர்தலை பிற்போடுமாறு அரசாங்க தரப்பை தவிர அனைவரும் மக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்துள்ளோம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

தேர்தலை பிற்போடுமாறு அரசாங்க தரப்பை தவிர அனைவரும் மக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்துள்ளோம்

(இராஜதுரை ஹஷான்) 

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான தீர்மானமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொரோனா வைரஸ் ஒரு தேசிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ஆனால் பொதுத் தேர்தலை ஒரு மாதமேனும் பிற்போடுமாறு அரசாங்க தரப்பை தவிர அனைவரும் மக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்துள்ளோம். 

ஆனால் அரசாங்கம் தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டும் என்று அழுத்தமாக உள்ளது. பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மாத்திரம் அரசாங்கம் தற்போது செயற்பட்டுக் கொள்கின்றது. மக்களே சிறந்த தீரமானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment