ஏற்றுமதிகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லை, தொலைபேசி இலக்கங்களையும் அறிமுகம் செய்தார் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

ஏற்றுமதிகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லை, தொலைபேசி இலக்கங்களையும் அறிமுகம் செய்தார் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன்

(செ.தேன்மொழி) 

உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகையைப் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்ணான்டோ ஏற்றுமதி செய்வதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், அதற்கான கொள்கலன்களும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள துரித நடவடிக்கைகளினால் உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களும் பாதிப்படைந்துளனர். 

இது தொடர்பில் அவர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், இவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கும் அறிவுறித்தியுள்ளேன். 

இதேவேளை இதுவரையில் ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு ஏற்றுமதி செய்ய ஆயத்தமாக இருக்கும் ஏற்றுமதியாளர்கள் 0714458476 என்ற இலக்கத்தின் ஊடாக ஏற்றுமதி பணிப்பாளர் தர்சன தி சில்வாவையும், 0777300372 என்ற இலக்கத்தில் பிரதிப் பணிப்பாளர் செனவிரத்ன 0777274879 பிரதிப் பணிப்பாளர் ரேகு சலீமையும் மற்றும் கொள்கலங்கள் பிரிவின் பணிப்பாளர் பேரின்ப நாயகத்தை 0777274879 ஊடாகவும், பிரதி பணிப்பளர் சுனில் ஜயசுந்தரவை 0777484664 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment